/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் தேசிய வேளாண் காடு பயிற்சி
/
பரமக்குடியில் தேசிய வேளாண் காடு பயிற்சி
ADDED : மார் 08, 2024 12:46 PM
பரமக்குடி; பரமக்குடி வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் பரமக்குடி வேளாண் விரிவாக்க மையத்தில் தேசிய வேளாண் காடுகள் கொள்கையின் குறிக்கோள்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட வனச்சரக அலுவலர் ஹேமலதா தலைமை வகித்தார்.
அவர் பேசியதாவது:
வேளாண் காடுகள் கார்பன் சேகரிப்பு, உயிரினபன்மை பாதுகாப்பு, நீர் மற்றும் நிலவள பாதுகாப்பு போன்ற சூழல் சேவைகளை புரிகிறது. விவசாயிகள் சொந்த தேவைகளுக்கும், தொழிற்சாலைகளின் மூலப்பொருள் தேவைகளுக்கும்மரங்களை வளர்த்து வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பெருக்குவதற்கு வேளாண் காடுகள் பெரிதும் உதவி புரியும். மேலும் வேளாண் காடுகளால் கிராமம் மற்றும் நகர்புறங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றார்.
பரமக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் மனோகரன், வேளாண்மை அலுவலர் சீதாலட்சுமி, விவசாயிகள் கலந்து கொண்டனர். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சிவக்குமார், தங்கவேலு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

