ADDED : நவ 02, 2026 05:41 PM

அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் சார்பில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடினர். இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவம் குறித்து மாணவிகள் எடுத்துரைத்து உறுதிமொழி எடுத்தனர்.
பள்ளி மாணவர்களும், கல்லுாரி மாணவிகளும் இணைந்து மனித சங்கிலி அமைத்து நாட்டின் ஒற்றுமை, சகோதரத்துவத்தை வலியுறுத்தினர்.உடன் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் இருந்தனர்.
