
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சமூக நல சங்கம் சார்பில் நேருஜி மைதானத்தில் 8ம் ஆண்டாக நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.
சங்க தலைவர் கங்காதரன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் ராஜன், மாருதிராமன் யோகையன் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் சரவணன் வரவேற்றார்.
சவுராஷ்டிரா சமூக நலச் சங்கம் சார்பில் மரக்கன்று நடுதல், ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ முகாம்கள், வங்கி சேவை என பல சேவைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை காலத்தில் மக்களின் குடிநீர் தேவைக்காக நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பொதுச் செயலாளர்கள் ரமேஷ், கோவிந்தன், துணைத் தலைவர்கள் சரவணன், நாகநாதன் உட்பட நிர்வாகிகள், மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர். பொருளாளர் சசிகுமார் நன்றி கூறினார்.

