/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நீட் அகாடமி பயிற்சி துவக்க விழா
/
நீட் அகாடமி பயிற்சி துவக்க விழா
ADDED : அக் 05, 2025 03:19 AM
ரெகுநாதபுரம், : ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சென்னை சைதன்யா நீட் அகாடமி மூலம் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ., பற்றிய அறிமுக வகுப்புகள் மற்றும் துவக்க விழா நடந்தது.
பள்ளி தாளாளர் கோகிலா தலைமை வகித்தார். நிர்வாக ஆலோசகர் ஜேக்கப் முன்னிலை வகித்தார். முதல்வர் பிரீத்தா வரவேற்றார். சைதன்யா அகாடமி சி.இ.ஓ., ராஜகுமாரி மற்றும் அகாடமி உறுப் பினர்கள் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் டாக்டர் தாசன், வினோத், சொப்னா ஆகியோர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நீட் மற்றும் ஜே.இ.இ., போட்டி தேர்வுகள் பற்றி விரிவாக விளக்கி கூறினர்.
துணை முதல்வர் முத்துக்கண்ணு நன்றி கூறினார். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் பாடங்கள் நடத்தப்பட்டன.