/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிணறுகளை சீரமைக்க மக்கள் கோரிக்கை
/
கிணறுகளை சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : அக் 05, 2025 03:18 AM
திருவாடானை : திருவெற்றியூர் ஊராட்சியில் கிணற்றை சீரமைத்து குடிநீர் வழங்கக் கோரி சட்டசபை மனுக்கள் குழுவிற்கு மக்கள் அளித்த மனு:
திருவெற்றியூரில் 400க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றோம். பல ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பையூர் கண்மாய்க் கரையில் இரண்டு சமுதாயக் கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் கிராமத்திற்கு தேவையான குடிநீர் சப்ளை செய்யப் பட்டது. சில ஆண்டு களுக்கு முன் கிணறுகளில் இருந்த மின்மோட்டார்கள் திருடு போனது.
இதனால் கிணறுகள் பயன்பாடில்லாமல் போய்விட்டது. இதனால் இப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தற்போது காவிரி கூட்டுக் குடிநீர் வாரத்திற்கு ஒரு முறை கிடைப்பதால் குடம் ரூ.15க்கு வாங்கி பயன்படுத்துகிறோம்.
இங்குள்ள பாகம் பிரியாள் கோயிலுக்கு வரும் பக்தர்களும் சிரமம் அடைந்துள்ளனர். எனவே பராமரிப்பில்லாமல் உள்ள இரண்டு சமுதாயக் கிணறுகளையும் சுத்தம் செய்து, புதிய மின் மோட்டார்களைப் பொருத்தி மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சட்டசபை மனுக்கள் குழுவிற்கு மனு அனுப்பியுள்ளோம் என்றனர்.