/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அரசு ஐ.டி.ஐ., பட்டமளிப்பு விழா
/
பரமக்குடி அரசு ஐ.டி.ஐ., பட்டமளிப்பு விழா
ADDED : அக் 05, 2025 03:17 AM

பரமக்குடி : பரமக்குடி அரசு ஐ.டி.ஐ., யில் 8ம் ஆண்டு பட்டமளிப்பு மற்றும் பரி சளிப்பு விழா நடந்தது.
மதுரை மண்டல பயிற்சி இணை ஆணையர் செல்வகுமார் தலைமை வகித்தார். பயிற்சி நிலைய முதல்வர் வாளைஆனந்தம் வரவேற்றார். இங்கு 13 தொழில் பிரிவுகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பரிசு கள் வழங்கப்பட்டன. மேலும் பயிற்சி முடித்து தேர்ச்சி அடைந்த 193 மாணவர்கள் பட்டம், சான்றிதழ் பெற்றனர்.
விழாவில் தொழில் முனைவோர் குருநாதன், நாகராஜன், சமூக ஆர் வலர் இந்திரஜித் உள்ளிட்டோர் பட்டங்களை வழங்கினர். நிர்வாக அலுவலர் திருமலை, பயிற்சி அலுவலர் சின்ன குப்புசாமி மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள், அமைச்சு பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.