ADDED : ஜன 09, 2025 05:01 AM

சிக்கல்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிக்கல் அருகே தரைப் பாலம் அகற்றப்பட்டு ரூ.4 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டது.
சிக்கல் அருகே பொட்டல்பச்சேரி அருகில் இருந்து முதுகுளத்துார் செல்லும் சாலை அருகே சிக்கல் கண்மாய் அமைந்துள்ளது.
சிக்கல் கண்மாயில் பிரதான வரத்து கால்வாய் அருகே தரைப்பாலம் செல்கிறது. பிரதான சாலையாக சிக்கல், முதுகுளத்துார் மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இதனால் ஒவ்வொரு பருவ மழைக் காலங்களிலும் மிதமிஞ்சிய வெள்ள நீர் வெளியேறியும் போக்குவரத்திற்கு தொடர் பாதிப்பும் ஏற்படுத்தியது. சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்ததால் வரத்து கால்வாய் துார்வாரப்படாமலும் இருந்தது.
இது குறித்து தினமலர் நாளிதழில் கடந்த ஆண்டு செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ரூ.4 கோடி திட்ட மதிப்பீட்டில் 80 மீ., நீளத்தில் புதிதாக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சிக்கல் கண்மாய்க்கு செல்லக்கூடிய வரத்துக்கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

