/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திறக்கப்படாமல் புதர்மண்டியுள்ள வருவாய் ஆய்வாளர் புதிய அலுவலகம்
/
திறக்கப்படாமல் புதர்மண்டியுள்ள வருவாய் ஆய்வாளர் புதிய அலுவலகம்
திறக்கப்படாமல் புதர்மண்டியுள்ள வருவாய் ஆய்வாளர் புதிய அலுவலகம்
திறக்கப்படாமல் புதர்மண்டியுள்ள வருவாய் ஆய்வாளர் புதிய அலுவலகம்
ADDED : ஜன 20, 2024 04:29 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு பல மாதங்களாக புதர்மண்டி பூட்டப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோவில் தெருவில் வருவாய்த்துறை சார்பில் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு பல லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது.
இதனால் அரசு நிதி பல லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே செடி,கொடிகளை அகற்றி புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வருவாய்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். அதற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும்.