/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெல் கொள்முதலில் மீண்டும் தாசில்தாரிடம் கையொப்பம் பெறுவதற்கு புதிய நடைமுறை
/
நெல் கொள்முதலில் மீண்டும் தாசில்தாரிடம் கையொப்பம் பெறுவதற்கு புதிய நடைமுறை
நெல் கொள்முதலில் மீண்டும் தாசில்தாரிடம் கையொப்பம் பெறுவதற்கு புதிய நடைமுறை
நெல் கொள்முதலில் மீண்டும் தாசில்தாரிடம் கையொப்பம் பெறுவதற்கு புதிய நடைமுறை
ADDED : ஜன 19, 2025 04:51 AM
செயல்படாத நிலையங்களால் விவசாயிகள் கவலை
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் முறைப்படுத்தப்படாத நிலையில் புதிதாக தாசில்தார் உள்ளிட்ட அலுவலர்களிடம் கையொப்பம் வாங்கும் நடைமுறையை செயல்படுத்தியுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நவ., மாதம் இறுதி கணக்கெடுப்பின் படி 1 லட்சத்து 30 ஆயிரத்து 112 ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து 2024 நவ.,13ல் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 70 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தயார் நிலையில் தளவாட சாமான்கள், பணியாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆன்லைன் மூலமும் கொள்முதல் செய்யப்படும் என்றனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் அறுவடை செய்யப்படும் நிலையில் திருவாடானை, ஏ.ஆர்.மங்களம் ஆகிய சில இடங்களை தவிர வேறு எந்தப் பகுதியிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படவில்லை.
இந்நிலையில் கடந்த கால நடைமுறையின் படி, வருவாய்த் துறை சான்றிதழ் பெற்று விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் சேர்க்கப்படும்.
ஆனால் இந்த ஆண்டு புதிதாக பழைய நடைமுறையை செயல்படுத்துவதுடன், மீண்டும் வி.ஏ.ஓ., தாசில்தாரிடம் கையொப்பம் பெறக் கூறி கொள்முதல் நிலையத்தில் படிவம் வழங்கி வருகின்றனர்.
இது குறித்து காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மலைச்சாமி கூறியதாவது:
விவசாயிகளை அலைக்கழிக்கும் வகையில் புதிய கையெழுத்து நடைமுறையை அரசு கொண்டு வந்துள்ளது.
மேலும் மாவட்ட அதிகாரி அறிவித்த நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது வரை திறக்கப்படாமல் இருக்கிறது.
தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு கூட ரூ.1000 வழங்க நிதி இல்லை எனக் கூறும் நிலையில், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதை தவிர்க்கும் நடவடிக்கையாக கருத வேண்டி உள்ளது என்றார்.

