/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆறு ஆண்டுகளுக்கு பின் ராமநாதபுரத்தில் புது ரயில்வே மேம்பாலம் இன்று திறப்பு

ADDED : செப் 20, 2024 07:11 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ரயில்வே பீடர் ரோட்டில் கீழக்கரை ரயில்வே மேம்பாலம் பணி துவங்கி 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் (செப்.20) பொது வாகன போக்குவரத்திற்கு திறக்கப்பட உள்ளது.
ராமநாதபுரம் நகரில் இருந்து சக்கரகோட்டை ஊராட்சி சேதுநகர் செல்லும் வழியில் உள்ள ரயில்வே கேட் மூடப்படும் போது பழைய பஸ் ஸ்டாண்ட் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இங்கு மேம்பாலம் அமைத்தால் கிழக்கு கடற்கரை சாலையை இணைத்து கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் சக்கரக்கோட்டை வழியாக ராமநாதபுரம் நகருக்கு எளிதாக வந்து செல்ல முடியும் என மக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து 2018ல் ரூ.23 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது. நிலம் கையப்படுத்துவதில் தாமதம் காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
6 ஆண்டுகளுக்கு பிறகு பணிகள் முடிந்தும் 2 மாதங்களாக பாலம் திறக்கப்படாமல் இருந்தது.
போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலத்தை திறக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக இன்று (செப்.20ல்) ரயில்வே மேம்பாலம் பொது போக்குவரத்து பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது.