/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கரூர் குடிநீர் திட்டத்தால் புதிய சாலைகள் சேதம்; ஊராட்சிக்கு தெரிவிக்காமல் குழாய்கள் பதிப்பு

ADDED : ஜன 08, 2024 05:02 AM

திருப்புல்லாணி : ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கரூர்-ராமநாதபுரம் புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தில் கிராமங்களில் குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. இப்பணி குறித்து ஊராட்சிகளில் கலந்து ஆலோசிக்காமல் மேற்கொள்வதால் புதிய சாலைகள் சேதமடைந்து அரசு நிதி வீணாடிக்கப்படுகிறது.
கரூர்-ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் கிராமங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. குறிப்பாக திருப்புல்லாணி ஒன்றியத்திற்குப் பட்ட பெரும்பாலான ஊராட்சிகளில் குழாய் பதிக்கப்படுகிறது. பொக்கனாரேந்தல் புல்லாணி அம்மன் கோயிலில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வரை உள்ள அரை கி.மீ., சாலையின் நடுப்பகுதியில் எவ்வித திட்டமிடுதலும் இல்லாமல் மண் தோண்டும் இயந்திரத்தின் மூலம் குழாய் பறிக்கும் பணியில் புதிய தார் சாலை சேதமடைந்து அரசு நிதியும் வீணடிக்கப்பட்டுள்ளது.
தாதனேந்தல் ஊராட்சி தலைவர் கோகிலா கூறியதாவது: ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவிக்காமல் எவ்வித கட்டுப்பாடும் இன்றி சாலையின் நடுவே குடிநீர் குழாய் பதித்துள்ளனர். இதனால் ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட தார் சாலை சேதமடைந்துள்ளது. பெரும்பாலான ஊராட்சிகளில் புதிய சாலையை சேதப்படுத்தும் செயல் தொடர்கிறது. இதனை தவிர்க்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் ஆலோசனை செய்து குழாய் பதிக்க வேண்டும். அதற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தவிடவேண்டும் என்றார்.