/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்திரகோசமங்கை- திருப்புல்லாணி டவுன் பஸ் நிறுத்தம்: பக்தர்கள் அவதி
/
உத்திரகோசமங்கை- திருப்புல்லாணி டவுன் பஸ் நிறுத்தம்: பக்தர்கள் அவதி
உத்திரகோசமங்கை- திருப்புல்லாணி டவுன் பஸ் நிறுத்தம்: பக்தர்கள் அவதி
உத்திரகோசமங்கை- திருப்புல்லாணி டவுன் பஸ் நிறுத்தம்: பக்தர்கள் அவதி
ADDED : பிப் 02, 2015 08:05 AM
கீழக்கரை : உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாத சுவாமி ஆலயத்திற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கிருந்து சீத்தை, களரி, ஆனைகுடி வழியாக 10 கி.மீ., தொலைவில் திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் உள்ளது. இந்த இரு ஊர்களுக்கு இடையே சென்று வந்த அரசு டவுன் பஸ், நிறுத்தப்பட்டதால் அதை நம்பியிருந்த பக்தர்கள் தற்போது ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் இருந்து உத்திரகோசமங்கைக்கும், திருப்புல்லாணிக்கும் தனித்தனியாக பஸ்களில் சென்று வழிபட்டு வருகின்றனர்.திருப்புல்லாணி ஒன்றியக்கவுன்சிலர், கும்பிடுமதுரையை சேர்ந்த கே.ராமலிங்கம் கூறுகையில்,''திருப்புல்லாணியில் உள்ள அரசுத்துறை அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிக்கூடங்களுக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வரை இயங்கிவந்த அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பலரும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து திருப்புல்லாணி ஒன்றியக்கூட்டங்களிலும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடமும் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை, தினைக்குளம் வழியாக மங்கம்மாள் சாலையில் பிரப்பன்வலசை, ராமேஸ்வரம் வரை செல்லும் வகையில் பஸ்வசதி ஏற்படுத்திட முன்வரவேண்டும்,'' என்றார்.