/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
/
பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ADDED : டிச 22, 2024 02:32 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சென்னை, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இடையே மையம் கொண்டுள்ளது. இதனால் கடலோர மாவட்டத்தில் சூறாவளியுடன் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட தீவுப் பகுதியில் கடந்த இரு நாட்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த தொலை துார காற்றழுத்த தாழ்வுநிலை எச்சரிக்கையால் நேற்று முன்தினம் இரவு பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இதன் மூலம் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பு உபகரணங்களை எடுத்துச் சென்று மீன்பிடித்து கரை திரும்ப மீன்வளத்துறையினர் அறிவுறுத்தினர்.