/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கால்நடை மருத்துவமனையில் உதவியாளர் நியமனம் இல்லை
/
கால்நடை மருத்துவமனையில் உதவியாளர் நியமனம் இல்லை
ADDED : டிச 14, 2024 06:22 AM
தொண்டி : தொண்டி பெருமானேந்தல் கால்நடை மருத்துவமனையில் பராமரிப்பு உதவியாளர் நியமனம் இல்லாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தொண்டி அருகே பெருமானேந்தல் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை உள்ளது.இங்கு தினையத்துார், நம்புதாளை, வட்டாணம், புதுபட்டினம், முகிழ்த்தகம், சம்பை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இங்கு கால்நடை உதவியாளர் நியமனம் இல்லாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாடுகளை கயிறு கட்டி தள்ளுவது மற்றும் தடுப்பு ஊசி போடும் போது கால்நடைகளை பிடிப்பதற்கு உதவியாளர்கள் இல்லாமல் டாக்டர்கள் சிரமப்படுகின்றனர்.
இதே போல் திருவாடானை தாலுகாவில் உள்ள பெரும்பாலான கால்நடை மருத்துவமனைகளில் உதவியாளர்கள் இல்லை. ஆடு, மாடுகளை கொண்டு வருபவர்கள் டாக்டர்களுக்கு உதவியாக செயல்படுகின்றனர்.
கால்நடை மருத்துவமனைகளுக்கு பராமரிப்பு உதவியாளர்களை நியமனம் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

