/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷனில் பாமாயில், பருப்பு வினியோகம் இல்லை! மக்கள் ஏமாற்றம்
/
ரேஷனில் பாமாயில், பருப்பு வினியோகம் இல்லை! மக்கள் ஏமாற்றம்
ரேஷனில் பாமாயில், பருப்பு வினியோகம் இல்லை! மக்கள் ஏமாற்றம்
ரேஷனில் பாமாயில், பருப்பு வினியோகம் இல்லை! மக்கள் ஏமாற்றம்
ADDED : மே 14, 2024 12:15 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 லட்சத்து 2681 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 306 அரிசி கார்டுகள், 1247 போலீஸ் கார்டுகள், பொருள் வேண்டாம் என்ற 264 கார்டுதாரர்கள் உள்ளனர். மாதந்தோறும் ரேஷனில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகிய பொருட்கள் ஒவ்வொரு மாதம் 1ம் தேதி முதல் மாதம் இறுதி வரை பொருட்கள் வழங்க வேண்டும்.
ஆனால் 20ம் தேதிக்கு மேல் சில பொருட்கள் இல்லை என்கின்றனர். இந்நிலையில் இம்மாதத்திற்குரிய (மே ) பாமாயில், துவரம் பருப்பு இதுவரை ரேஷன் கடைகளுக்கு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து வழங்கவில்லை.அரிசி, சர்க்கரை வழங்கப்படுகிறது.
கடை திறந்திருந்தாலும் அனைத்து பொருட்களையும் வாங்க முடியாமல் கார்டுதாரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சிலர் விற்பனையாளர்களுடன் வாக்குவாதரத்தில் ஈடுபடுகின்றனர். எப்போது வரும் என பதிலளிக்க முடியாமல் கடைக்காரர்கள் திணறுகின்றனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் நுகர்பொருள் வாணிபகழக அதிகாரிகள் கூறுகையில், இப்பிரச்னை ராமநாதபுரத்தில் மட்டும் இல்லை. பல மாவட்டங்களில் உள்ளது.நடப்பு மாதத்திற்குரிய பாமாயில், துவரம் பருப்பு டெண்டர் விட்டு கொள்முதல் செய்வதற்கு தாமதம் ஏற்பட்டது.2 நாட்களில் சரக்கு வந்தவுடன் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பாமாயில், பருப்பு அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

