/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை: கலெக்டரிடம் புகார்
/
பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை: கலெக்டரிடம் புகார்
பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை: கலெக்டரிடம் புகார்
பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை: கலெக்டரிடம் புகார்
ADDED : நவ 25, 2025 05:18 AM
ராமநாதபுரம்: பார்த்திபனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரக் கோரி பெற்றோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.
வீட்டுமனை பட்டா, உதவித்தொகை, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவை குறித்து 185 பேர் மனு அளித்தனர். பார்த்திபனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கழிப்பறை இல்லாததால் மயானம் அருகே செல்கின்றனர். இதனால் மாணவர்கள் பயப்படுகின்றனர். பள்ளியில் மாணவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திருப்பாலைக்குடி காந்திநகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜெயசந்திரா தனது கணவர் சுரேஷ் மீது போலீசார் அடிக்கடி பொய் வழக்கு பதிவு செய்வதாகவும், சாயல்குடி வி.வி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த முனியசாமி கந்துவட்டி தொல்லையால் மன உளைச்சலில் இருப்பதாகவும் மனு கொடுத்தனர்.
கீழமுடிமன்னார்கோட்டை பகுதியை சேர்ந்த சிந்தனைச் செல்வி தனது வீட்டை ஆக்கிரமித்து சிலர் தாக்குகின்றனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் தீபாவளி சீட்டு செலுத்திய நிலையில், தற்போது வரை பணம் தரவில்லை என புகார் அளித்தனர்.

