ADDED : நவ 25, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் தென்னரசு கூறியதாவது:
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப வாங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 110 கடைகளில் அதற்கான எவ்வித கட்டமைப்பு வசதியும் ஏற்படுத்தி தரவில்லை. போதிய அளவில் பணியாளர்கள் இல்லாததால் மன உளைச்சலில் உள்ளோம்.
இதனால் காலி பாட்டில்கள் வாங்க மறுப்பு தெரிவித்துள்ளோம். அரசு நெருக்கடி கொடுத்தால் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.

