/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பார்த்திபனுார் அரசு பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை: கால்வாயை நாடுவதால் ஆபத்து
/
பார்த்திபனுார் அரசு பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை: கால்வாயை நாடுவதால் ஆபத்து
பார்த்திபனுார் அரசு பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை: கால்வாயை நாடுவதால் ஆபத்து
பார்த்திபனுார் அரசு பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை: கால்வாயை நாடுவதால் ஆபத்து
ADDED : நவ 23, 2025 04:29 AM
பரமக்குடி: பரமக்குடி அருகே பார்த்திபனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை வசதியின்றி மாணவர்கள் கால்வாயை தேடி செல்வதால் ஆபத்தான நிலை உள்ளது.
பார்த்திபனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பல ஆயிரம் மாணவர்கள் படித்த நிலையில் தற்போது 137 மாணவிகள், 173 மாணவர்கள் என 310 பேர் வரை மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில் பள்ளி கட்டடம் ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளது. விளையாட்டு மைதானங்கள் முறையாக இல்லாமல் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை தொடர்கிறது.
இச்சூழலில் மாணவிகளுக்கான கழிப்பறை வசதி இருந்தாலும் தற்போது சேதமடைந்த நிலை உள்ளது.
இதற்கு மத்தியில் மாணவர்களுக்கான கழிப்பறை இல்லாமல் கடந்த மாதங்களில் 6 பேர் வரை மட்டுமே செல்லும் வகையில் கட்டப் பட்டுள்ளது.
இதனால் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அருகில் உள்ள கால்வாய் பகுதிகளுக்கு செல்ல ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தும் நிலை இருக்கிறது.
இதனால் கால்வாய்களில் நீர்வரத்து உள்ள நேரங்களில் ஆபத்தான நிலையை மாணவர்கள் உணர்கின்றனர்.
மேலும் அருகிலேயே சுடுகாடு உள்ளதால் அவ்வப்போது பிணங்களை எரியூட்டும் போது மாணவர்கள் பயப்படும் சூழல் உள்ளது.
மாணவர்களின் மனநிலையை உணர்ந்து கழிப்பறை வசதி, காம்பவுண்ட் கட்ட வேண்டும்.
மேலும் பெற்றோர் மத்தியில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

