/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிழக்கு கடற்கரை சாலை ஓரம் சாய்ந்து கிடக்கும் ஒளிரும் பேட்டரி விளக்குகள்
/
கிழக்கு கடற்கரை சாலை ஓரம் சாய்ந்து கிடக்கும் ஒளிரும் பேட்டரி விளக்குகள்
கிழக்கு கடற்கரை சாலை ஓரம் சாய்ந்து கிடக்கும் ஒளிரும் பேட்டரி விளக்குகள்
கிழக்கு கடற்கரை சாலை ஓரம் சாய்ந்து கிடக்கும் ஒளிரும் பேட்டரி விளக்குகள்
ADDED : நவ 23, 2025 04:30 AM
ஆர்.எஸ்.மங்கலம்: கிழக்கு கடற்கரை சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த ஒளிரும் எச்சரிக்கை பேட்டரி விளக்குகள் பராமரிப்பின்றி சாய்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
துாத்துக்குடி துறைமுகம் மற்றும் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளும், கனரக வாகனங்களும் அதிகளவில் செல்லும் வழித்தடமாக கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ளது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் ஆபத்தான வளைவுகள், விபத்து பகுதிகள் உள்ளிட்டவைகளை வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் ரோட்டோரங்களில் இரவில் ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உப்பூர், புதுக்காடு, ஏ.மணக்குடி உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலையில் ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பேட்டரி விளக்குகள் சாய்ந்து பயனற்ற நிலையில் உள்ளன.
சில கம்பங்களில் பேட்டரிகள் திருடு போன நிலையில் உள்ளன.
இதனால் வெளியூர்களிலிருந்து இந்த வழித்தடத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்து பகுதிகள், ஆபத்தான வளைவு பகுதிகள் தெரியாமல் இரவில் விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பராமரிப்பின்றி உள்ள ரோட்டோர பேட்டரி ஒளிரும் விளக்குகளை பராமரிப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ள னர்.

