/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெயரளவுக்கு இயங்கும் கால்நடை பயிற்சி மையம்
/
பெயரளவுக்கு இயங்கும் கால்நடை பயிற்சி மையம்
ADDED : ஆக 06, 2025 08:36 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கால்நடை மருத்துவப் பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி மீண்டும் துவங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ராமநாதபுரத்தில் கால்நடை மருத்துவப் பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் 2013 முதல் செயல்பட்டு வருகிறது. இதன் முக்கியக் குறிக்கோள் கால்நடை வளர்ப்பு குறித்து ஆராய்ச்சி செய்து அதை மக்களிடம் கொண்டு செல்வது, கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளை கண்டறிந்து தீர்வு காண்பது.
ஆரம்ப காலத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி இலவசமாக நடத்தப்பட்டு வந்தது. அதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வந்து பயிற்சி பெறுவதுடன், கால்நடை வளர்ப்பில் தீவிர ஆர்வம் காட்டினர். தற்போது நிதி பற்றாக்குறை, ஆள் பற்றாக்குறை காரணமாக எவ்வித பயிற்சியும் நடத்தப்படுதில்லை.
இப்பயிற்சி மையத்தின் தலைவர் தான் திருநெல்வேலி மாவட்டத்திற்கான பொறுப்பையும் கவனித்து வருகிறார். இதனால் கால்நடை மருத்துவப் பல்லை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமானது சமீப காலமாக பெயரளவுக்கு மட்டும் செயல்பட்டு வருகிறது.
மாவட்டத்தின் முக்கிய பொருளாதார மேம்பாட்டில் ஒன்றாக கால்நடை வளர்ப்பு உள்ளது. இளைஞர்களுக்கு கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தியுள்ளனர்.