/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விளங்குளத்துாரில் செயல்படாத ஆர்.ஓ.,பிளான்ட்: மக்கள் அவதி
/
விளங்குளத்துாரில் செயல்படாத ஆர்.ஓ.,பிளான்ட்: மக்கள் அவதி
விளங்குளத்துாரில் செயல்படாத ஆர்.ஓ.,பிளான்ட்: மக்கள் அவதி
விளங்குளத்துாரில் செயல்படாத ஆர்.ஓ.,பிளான்ட்: மக்கள் அவதி
ADDED : ஜூன் 05, 2025 12:54 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே விளங்குளத்துாரில் சில ஆண்டுகளாக ஆர்.ஓ.,பிளான்ட் பயன்பாடின்றி சேதமடைந்துள்ளது. குடிநீருக்காக மக்கள் சிரமப்படுகின்றனர்.
விளங்குளத்துார் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆர்.ஓ., பிளான்ட் அமைக்கப்பட்டது. கிராம மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
பின் முறையாக பராமரிப்பின்றி ஆர்.ஓ.,பிளான்ட் சில ஆண்டுகளாக செயல்படாமல் சேதமடைந்துள்ளது. இதனால் அரசின் நிதியும் வீணடிக்கப்படுகிறது. டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலை தொடர்கிறது. 2 கி.மீ.,ல் இருந்து காவிரி தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே கிராம மக்களின் நலன்கருதி ஆர்.ஓ., பிளான்ட்டை சீரமைக்க வேண்டும்.
இதேபோல் முதுகுளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஆர்.ஓ., பிளான்ட் பயன்பாடின்றி உள்ளது. அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.