/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வட்டார போக்குவரத்து காரை பயன்படுத்துவதில்.. ஆர்வமில்லை: ஒன்றரை ஆண்டில் 60 பேரே பயன்படுத்தி உள்ளனர்

ADDED : ஜூலை 12, 2025 11:35 PM

ராமநாதபுரம்: -தமிழகத்தில் அரசு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அரசின் சோதனை ஓட்ட கார் வழங்கப்பட்டு ஓட்டுநர் பயிற்சி பள்ளி இல்லாமல் நேரடியாக ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களுக்கு சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இதனை பயன்படுத்த ஆர்வம் இல்லாத நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 60 பேர் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து கற்றுக்கொள்பவர்கள் அவர்களது காரை சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்தி வந்தனர். இதன் காரணமாக கார் இல்லாதவர்கள் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை மட்டுமே நம்பியிருந்தனர்.
சோதனை ஓட்டத்திற்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பம் செய்பவர்கள். அரசு சோதனை ஓட்ட காரை பயன்படுத்தி கொள்ளலாம்.
இதற்கு ஓட்டுநர் உரிமக்கட்டணமாக அரசுக்கு செலுத்தும் தொகையில் ரூ.50 மட்டும் கூடுதலாக செலுத்தினால் அரசு காரை சோதனை ஓட்டத்திற்காக பயன்படுத்திக்கொள்ளலாம். சொந்தமாக கார் இல்லாதவர்களும் இதனை பயன்படுத்தி கொள்ள ஏதுவாக இந்த கார் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட கார் ஒன்றரை ஆண்டுகளில் இதுவரை இந்த காரை 60 பேர் மட்டுமே ரூ.50 கட்டணம் செலுத்தி பயன்படுத்தியுள்ளனர். அரசு சோதனை ஓட்ட காரை குறைந்த நபர்களே பயன்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ---