தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பரமக்குடியில் வெட்டிய மரக்கிளைகளை அகற்றவில்லை: போக்குவரத்து பாதிப்பு

பரமக்குடியில் வெட்டிய மரக்கிளைகளை அகற்றவில்லை: போக்குவரத்து பாதிப்பு

பரமக்குடியில் வெட்டிய மரக்கிளைகளை அகற்றவில்லை: போக்குவரத்து பாதிப்பு


UPDATED : நவ 23, 2026 06:14 PM

ADDED : நவ 23, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 06:14 PM ADDED : நவ 23, 2026 06:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடியில் மின் பராமரிப்பு பணிகளின் போது வெட்டப்பட்ட மரக்கிளைகள் அகற்றப்படாமல் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக கிடக்கின்றன.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளின் போது உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மரக்கிளைகள் வெட்டப்படுவது வழக்கமாக உள்ளது. இதன்படி நகரில் உள்ள டிரான்ஸ்பார்ம்கள் மற்றும் மின் பாதைகளை சேதப்படுத்தும் மரக்கிளைகள் ஏராளமாக வெட்டப்பட்டன.

ஒவ்வொரு முறையும் வெட்டப்படும் மரக்கிளைகள் நாள் கணக்கில் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன் காய்ந்து சருகாகும் வரை விட்டு செல்கின்றனர். தொடர்ந்து குறுகிய தெருக்களில் வாகன போக்குவரத்து தடைபடும் சூழல் உள்ளது. சில இடங்களில் பெரிய மர கிளைகளை தேவையான நபர்கள் கொண்டு செல்கின்றனர். பயன்படாத மரக்கிளைகளை மின் ஊழியர்களோ அல்லது நகராட்சி பணியாளர்களோ அகற்றுவது கிடையாது.

இதனால் அருகில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற முடியாதபடி இருக்கிறது. ஆகவே விபத்தை ஏற்படுத்தும் வகையில் ரோட்டில் உள்ள மரக்கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us