/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெடுஞ்சாலை தகவல் பலகையில் நோட்டீஸ்
/
நெடுஞ்சாலை தகவல் பலகையில் நோட்டீஸ்
ADDED : பிப் 12, 2026 05:35 AM

திருவாடானை: நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்படுவதால் மக்கள் விபரங்களை தெரிந்து கொள்ள முடிவதில்லை.
திருவாடானை பகுதியில் புதுப்பிக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் திட்ட மதிப்பீடு எவ்வளவு, சாலை எத்தனை ஆண்டுகளுக்குப் பராமரிக்கப்பட வேண்டும், ஒப்பந்தக்காரர் பெயர் போன்ற பல்வேறு விபரங்கள் அடங்கிய தகவல் பலகை வைக்கப்படும்.
இப் பலகையில் சிலர் வாழ்த்து விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு நோட்டீஸ்களை ஒட்டுவதால் விபரங்கள் மறைக்கப் படுகின்றன.
இது குறித்து கரையக்கோட்டை மக்கள் கூறுகையில், பல இடங்களில் சாலை தரமற்றதாக இருந்தால் அதை மக்கள் தட்டிக்கேட்கப் பலகையில் உள்ள விவரங்கள் உதவும். நோட்டீஸ் ஒட்டப்படுவதால் தகவல்களை தெரிந்து கொள்ள முடியவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

