/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை தொகுதியில் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்
/
திருவாடானை தொகுதியில் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்
ADDED : டிச 31, 2025 05:22 AM
திருவாடானை: திருவாடானை சட்டசபை தொகுதியில் 2002 விபரங்களை குறிப்பிடாத 4243 பேருக்கு நோட்டீஸ் வழங்கி கூடுதல் ஆவணங்கள் பெறப்பட உள்ளன.
திருவாடானை சட்ட சபை தொகுதியில் டிச.,19 நிலவரபடி 1 லட்சத்து 36 ஆயிரத்து 38 ஆண்கள், ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 379 பெண்கள், பிறர் 22 என 2 லட்சத்து 73 ஆயிரத்து 439 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இத் தொகுதியில் 378 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. எஸ்.ஐ.ஆர்., படிவத்தில் கடந்த 2002 விபரங்களை குறிப்பிடாத 4243 வாக்காளர்களுக்கு, நோட்டீஸ் வழங்கி, கூடுதல் ஆவணங்கள் பெறப்பட உள்ளன.
இது குறித்து தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது- வாக்காளர்கள், தேர்தல் கமிஷன் பட்டியலிட்டுள்ள 13ல் ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து, தங்கள் ஓட்டுரிமையை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு வாக்காளரும், எஸ்.ஐ.ஆர். படிவத்தில், சுய விபரங்கள் மட்டுமின்றி, 2002ல் இடம் பெற்ற வாக்காளரின் விபரம் அல்லது உறவினர்களின் விபரங்களை குறிப்பிட வேண்டும்.
கணக்கீட்டு படிவத்தில் 2002 விபரங்களை குறிப்பிடாதோர், வரைவு பட்டியல் வெளியானபின் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர்களின் வசதிக்காக ஜன., 3, 4 தேதிகளில் ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது. வாக்காளர்கள் பங்கேற்று படிவங்களை வாங்கி உரிய ஆவணங்களை இணைத்து வழங்கலாம் என்றனர்.

