/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டியில் ரவுண்டானா இல்லாததால் அதிவேக வாகனங்களால் விபத்து அபாயம்
/
தொண்டியில் ரவுண்டானா இல்லாததால் அதிவேக வாகனங்களால் விபத்து அபாயம்
தொண்டியில் ரவுண்டானா இல்லாததால் அதிவேக வாகனங்களால் விபத்து அபாயம்
தொண்டியில் ரவுண்டானா இல்லாததால் அதிவேக வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : டிச 31, 2025 05:22 AM
தொண்டி: தொண்டி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மூன்று ரோடுகள் சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா இல்லாததால், தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது.
தொண்டி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நம்புதாளை, தொண்டி, திருவாடானை மூன்று ரோடுகள் சந்திக்கும் இடமாக உள்ளது. ராமநாதபுரம்--பட்டுக்கோட்டை கிழக்கு கடற்கரை சாலையாகவும், மதுரை -- தொண்டி தேசிய நெடுஞ்சாலையாக சந்திக்கும் இடமாக உள்ளது.
வாகனங்கள் ஒரே நேரத்தில் அப்பகுதியில் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பிரிவு சாலையில் அதிக வேகமாக தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்துக்களும் நடக்கிறது.
இதற்கு தீர்வாக சந்திப்பின் மையப்பகுதியில் ரவுண்டானா அமைத்து போக்குவரத்தை பிரித்து விடுவதே பிரச்னைக்கு தீர்வாகும். தொண்டி மாலிக் கூறுகையில், இரவில் மாடுகள் ஓய்விடமாக இந்த இடம் உள்ளது. ஏராளமான மாடுகள் ஆங்காங்கே படுத்துள்ளது. வேகமாக செல்லும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வாகனங்கள் வேகத்தை கட்டுபடுத்தும் விதமாக ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.