/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாவல் பழம் விற்பனை ஜோர்: கிலோ ரூ.180
/
நாவல் பழம் விற்பனை ஜோர்: கிலோ ரூ.180
ADDED : ஜூலை 03, 2025 10:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; சீசனை முன்னிட்டு வெளியூர்களில் இருந்தும் ராமநாதபுரத்தில் நாவல் பழங்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன.  தரத்திற்குஏற்ப கிலோ ரூ.160 முதல் 180 வரை விற்கப்படுகிறது.
நாவல் பழம் சீசன் பொதுவாக மே மாதம் இறுதியில் துவங்கி ஆகஸ்ட் வரை  உள்ளது.  ராமநாதபுரத்திற்கு உள்ளூர்மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் நாவல் பழங்கள் அதிகஅளவில் விற்பனைக்கு வந்துள்ளன.
சந்தையில் பழத்தின்அளவு, தரத்திற்கேற்ப கிலோ ரூ.160 முதல் ரூ.180 வரையும், சில்லறை விற்பனைக்கு கால்படி ரூ.20க்கு விற்கின்றனர். மருத்துவ குணமிக்கது என்பதால் நாவல் பழத்தை மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.

