/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராம சாலைகளில் காய்த்து குலுங்கும் நாவல் பழங்கள்
/
கிராம சாலைகளில் காய்த்து குலுங்கும் நாவல் பழங்கள்
ADDED : ஆக 02, 2025 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம் : -பெரியபட்டினம், களிமண்குண்டு, தினைக் குளம், முத்துப்பேட்டை, ரெகுநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள நாவல் மரங்களில் தற்போது பழங்கள் காய்த்துக் குலுங்குகிறது.
ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் நாவல் பழம் சீசன் உள்ளது.
கிராமப்பகுதிகளில் வீடுகள் தோறும் வளர்க்கப்படும் நாவல் பழங்களில் அதிகளவு பழங்களை உரிய முறையில் சேகரித்து அவற்றை ராம நாதபுரம் நகர் பகுதிகளுக்கு சில்லரை விற்பனைக்காக சாலையோர வியாபாரிகள் வாங்கிச் செல் கின்றனர்.
சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளுக்கு பலன் தரக்கூடிய நாவல் பழத்தின் மகத்துவம் அறிந்து ஏராளமானோர் ஆர்வ முடன் வாங்குகின்றனர்.