ADDED : மார் 29, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீரனுார் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணித் திட்டம் முகாம் நடந்தது.
முதல்வர் தர்மர் தலைமை வகித்தார். கிராமத் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மாமல்லன் வரவேற்றார்.
கிராமத்தில் ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி மையம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. யூத் இந்தியா என்ற தலைப்பில் மத்திய, மாநில அரசு திட்டங்களையும், மாணவர்களின் சட்ட உரிமைகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் வெள்ளைபாண்டியன் பேசினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரநாயகம் செய்தார்.