ADDED : நவ 24, 2024 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., தினவிழா கொண்டாடப்பட்டது. முதல்வர் சேக் தாவூத் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேஷ் குமார் முன்னிலை வகித்தார்.
என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்று மங்களேஸ்வரி மன்னார் வளைகுடா கடற்கரையோர பகுதிகளில் துாய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
ஏற்பாடுகளை தேசிய தரைப்படை அலுவலர்மருதாச்சல மூர்த்தி செய்திருந்தார்.
என்.எஸ்.எஸ்., தினத்தின் முக்கியத்துவம், நாட்டிற்காக ஆற்றிய சேவைகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.