ADDED : அக் 14, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்குடன் திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2ம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி இரு நாட்கள் நடந்தது. மஞ்சூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன மாவட்ட ஆசிரியர் வெள்ளத்துரை தலைமை வகித்தார்.
வட்டாரக் கல்வி அலுவலர் பாண்டீஸ்வரி, தலைமை ஆசிரியர் மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் பயிற்றுனர்கள் கலாமேகலை, கல்யாணசுந்தரம், பிரிட்டோ கருத்தாளர்களாக பயிற்சி அளித்தனர். பயிற்சி நிறுவன நுாலகர் பாரதிராஜா நன்றி கூறினார்.