ADDED : மே 13, 2025 01:06 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் செய்யது அம்மாள் செவிலியர் பள்ளியில் உலக செவிலியர் தினவிழா நடந்தது.
கல்லுாரி தாளாளர் டாக்டர் ராசிகா தலைமை வகித்து பேசுகையில், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் செவிலியர் பங்கு இன்றியமையாததாக உள்ளது. பிரான்ஸ் நைட்டிங் கேல் சேவையை நினைவு கூர்ந்து அவரது பிறந்தநாள் மே 12 செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது என்றார்.
பள்ளி முதல்வர் ஆர்த்தி வரவேற்றார். மாணவிகளுக்கு வினாடி வினா, கோலப் போட்டிகள் நடந்தன. வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
துணை முதல்வர் ஜீலி நேசமணி நன்றி கூறினார். ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கூட்ட அரங்கத்தில் தாய்பாசம் அறக்கட்டளை சார்பில் உலக செவிலியர் தினம் கொண்டாடினர்.
டீன் அமுதராணி, செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா,வாலிய காஸ் ராஜாராம் பாண்டியன், தாய்பாசம் அறக்கட்டளையின் நிறுவனர் பாதுஷா பங்கேற்றனர். அனைவரும் மெழுதுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்தனர்.
முதுகுளத்துார்: அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர் கண்காணிப்பாளர் சண்முகவள்ளி தலைமை வகித்தார்.
தலைமை செவிலியர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். செவிலியர்கள் உறுதிமொழி எடுத்தனர். பின்பு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.