ADDED : ஆக 21, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செவிலியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆக.,20 முதல் 22 வரை அரசு மருத்துவமனைகள் முன்பு ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம் செய்யப்படும் என அறிவித்தனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன்பு நேற்று காலை 8:00 முதல் 9:00 மணி வரை செவிலியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசு மருத்துவமனைகளில் மறு பணியமர்த்துதலை கைவிடுவது, தொகுப்பூதிய முறையை கைவிட்டு நிரந்த பணியிடங்களை உருவாக்குவது, செவிலியர்களை செவிலியர் அலுவலர் என பெயர் மாற்றம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
–
