ADDED : ஆக 21, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ரேஷன் விநியோக திட்ட(பி.ஓ.எஸ்.,) மிஷினை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர். சங்க மாவட்ட தலைவர் தினகரன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:
பொது விநியோக திட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகை பதிவு செய்வதற்காக அதிநவீன ரேஷன் விநியோக மிஷின்(பி.ஓ.எஸ்.,) வழங்கப்பட்டது. கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக சர்வர் பிரச்னை காரணமாக மிஷின் வேலை செய்யவில்லை. இதனால் ரேஷன் பொருட்களை விநியோகிக்க முடியவில்லை.
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் பிரிவு தனி தாசில்தார் பழனிக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
