ADDED : ஜன 24, 2025 04:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
மாவட்டத்தலைவர் சகாய தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில், வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போன்று சிறப்பு காலமுறை ஊதியம், அகவிலைப்படியுடன் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6750 வழங்க வேண்டும்.
பணிக்கொடையை அமைப்பாளருக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தினர். மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

