/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 07, 2026 05:36 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பிப்.,3 முதல் மாவட்ட அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தம் மறியல் போராட்டம் நடந்தது. இதன்தொடர்ச்சியாக நேற்று முதல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் வாக்குறுதிபடி, அரசு காலிப்பணியிடங்களில் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு பணிவழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினர். கோரிக்கைகள் நிறைவேற்றும் வரையிலும் இரவில் தங்கி போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்படும் என சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கூறினர்.

