காச நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து உதவித்தொகை நிறுத்தம்
காச நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து உதவித்தொகை நிறுத்தம்
ADDED : ஆக 13, 2026 11:33 PM
ராமநாபுரம்: மத்திய அரசின் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில், காசநோயாளிகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக 'நிக்ஷய் போஷன் யோஜனா' திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் 2025 ஆக., முதல் பெரும்பாலான காச நோயாளிகளுக்கு ரூ.1000 வரவில்லை. குறிப்பாக நடப்பாண்டில் ஜன., முதல் முழுமையாக மாதாந்திர தொகை நிறுத்தப்பட்டு இதுவரை வழங்கப்படாமல் உள்ளதால் காச நோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இந்த தொகையை நோயாளிகள் வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து காச நோய் பிரிவு மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய அரசின் தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தில் நிதி வழங்கப்பட்டாலும், தமிழக அரசு மூலம் தான் ஊட்டச்சத்து தொகை விடுவிக்கப்படுகிறது.
நடப்பு தேதி வரை சிகிச்சை பெறுபவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்து இப்பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் சிகிச்சை பெற்றவர்கள், சிகிச்சை பெறுபவர்களின் வங்கி கணக்கில் மாதாந்திர தொகை வரவு வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றனர்.-----
