/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாக்காளர் முகவரியில் கள ஆய்வு செய்து திருத்தம் செய்ய பார்வையாளர் அறிவுரை
/
வாக்காளர் முகவரியில் கள ஆய்வு செய்து திருத்தம் செய்ய பார்வையாளர் அறிவுரை
வாக்காளர் முகவரியில் கள ஆய்வு செய்து திருத்தம் செய்ய பார்வையாளர் அறிவுரை
வாக்காளர் முகவரியில் கள ஆய்வு செய்து திருத்தம் செய்ய பார்வையாளர் அறிவுரை
ADDED : டிச 23, 2024 04:46 AM
ராமநாதபுரம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்களில் பெறப்பட்டமனுக்கள் மீது சம்பந்தப்பட்டவர் முகவரியில் கள ஆய்வு செய்து அதன் பிறகு திருத்தம் செய்ய வேண்டும் என ராமநாதபுரம்மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஹனிஷ் சாப்ரா அறிவுறுத்தியுள்ளார்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர்சிறப்பு திருத்த முகாம் 2024ல் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பானஆய்வுக் கூட்டம் நடந்தது.
மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஹனிஷ் சாப்ராதலைமை வகித்தார். மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் முன்னிலை வகித்தார்.
இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி அக்.,19ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அன்றுமுதல் ஒரு மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடந்தன. மாவட்டத்தில் உள்ள 1374 ஓட்டுச்சாவடிகளிலும் நவ.16, 17, 23, 24 ஆகியதேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடந்தது.
இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும்திருத்தம் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மனுக்கள் மீதும் மனுதாரர்கள் வழங்கியுள்ள முகவரியில் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
அப்போது தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளவிதிமுறைகளை பின்பற்றி ஆவணங்களை சரிபர்த்து மனுக்கள் மீதுஅலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஹனிஷ் சாப்ரா தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், தேர்தல் தாசில்தார்முருகேசன் உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

