ADDED : செப் 30, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டியில் த.மு.மு.க., 31ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதிய த.மு.மு.க., அலுவலகம் பன்னுால் ஆசிரியர் அப்துல்ரஹீம், த.மு.மு.க முன்னாள் மாநில செயலாளர்அப்துல்ரஹிம் நினைவாக படிப்பகம் துவக்க விழாவும் நடந்தது. விழாவிற்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜிப்ரி தலைமை வகித்தார்.
தொண்டி ஹிந்து தர்ம பரிபாலன சபை நிர்வாகிகள், கிறிஸ்தவ சபை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். த.மு.மு.க., மாநிலச் செயலாளர் சாதிக் பாட்சா 31 ஆண்டு சேவைகள் பற்றி பேசினார். பரக்கத்அலி நன்றி கூறினார்.