/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அலுவலர் பணியிடம் இரண்டு ஆண்டுகளாக காலி
/
அலுவலர் பணியிடம் இரண்டு ஆண்டுகளாக காலி
ADDED : ஏப் 28, 2025 05:37 AM
திருவாடானை: திருவாடானையில் குழந்தைகள் நல வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகளாக அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது.திருவாடானையில் குழந்தைகள் நல வளர்ச்சித் திட்ட அலுவலகம் உள்ளது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, பாலர் கல்வி, சுகாதாரம், நோய் தடுப்பு, சுகாதார பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பணிகள் இந்த அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
அங்கன்வாடி மையங்களை நிர்வகித்தல், பணியாளர்களை கண்காணித்தல், குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் சேவைகளை உறுதி செய்தல், திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணித்து அறிக்கை சமர்ப்பித்தல் போன்றவை குழந்தைகளின் நல வளர்ச்சி திட்ட அலுவலரின் பணியாகும்.
இங்கு பணியாற்றிய அலுவலர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். தற்போது ராமநாதபுரம் அலுவலர் இங்கு கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றுகிறார். நிரந்தர குழந்தைகள் நல வளர்ச்சி திட்ட அலுவலர் இல்லை. இத் தாலுகாவில் 136 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. எனவே நிரந்தர குழந்தைகள் நல வளர்ச்சித் திட்ட அலுவலர் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.