/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தீயணைப்பு நிலையத்தில் ரூ.35,300 பறிமுதல் அலுவலரிடம் விசாரணை
/
தீயணைப்பு நிலையத்தில் ரூ.35,300 பறிமுதல் அலுவலரிடம் விசாரணை
தீயணைப்பு நிலையத்தில் ரூ.35,300 பறிமுதல் அலுவலரிடம் விசாரணை
தீயணைப்பு நிலையத்தில் ரூ.35,300 பறிமுதல் அலுவலரிடம் விசாரணை
ADDED : அக் 16, 2025 07:41 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் தீபாவளியை முன்னிட்டு வசூலித்த பட்டாசு பாக்ஸ்கள் மற்றும் ரூ.35 ஆயிரத்து 300 சிக்கியது.
பரமக்குடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லஞ்சம் வசூலிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் பரமக்குடி தீயணைப்பு நிலையத்தில் நேற்று சோதனை நடத்தினர்.
அப்போதுகணக்கில் வராத ரூ.35,500, பட்டாசு கிப்ட் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் 50, மற்றும் மற்ற அலுவலர்களிடம் போலீசார் விசாரித்தனர். பணத்திற்கான கணக்கு காட்டவில்லை என்றால் சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.