/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாடகை கட்டடங்களில் இயங்கும் அலுவலகங்கள்: அரசுக்கு நிதி இழப்பு
/
வாடகை கட்டடங்களில் இயங்கும் அலுவலகங்கள்: அரசுக்கு நிதி இழப்பு
வாடகை கட்டடங்களில் இயங்கும் அலுவலகங்கள்: அரசுக்கு நிதி இழப்பு
வாடகை கட்டடங்களில் இயங்கும் அலுவலகங்கள்: அரசுக்கு நிதி இழப்பு
ADDED : ஆக 31, 2025 11:29 PM
தொண்டி: தொண்டியில் உள்ள அரசு அலுவலகங்கள் வாடகை கட்டடங்களில் இயங்குவதால் மாந்தோறும் அரசுக்கு ரூ. பல ஆயிரம் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தொண்டியில் தபால் அலுவலகம், சுங்கத்துறை மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகிறது. இதில் சுங்கதுறைக்கு சொந்தமான கட்டடம் பாழடைந்ததால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாடகை கட்டடத்தில் அமைக்கபட்டது. இதுவரை சொந்த கட்டடத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெறவில்லை.
அரசு அலுவலகங்கள் வாடகை கட்டடத்தில் இயங்குவதால் அரசுக்கு மாதந்தோறும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான காலி இடங்கள் இருந்தும் பயன்படாமல் உள்ளது.
இது குறித்து தொண்டி மக்கள் கூறுகையில், வாடகை கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல்வேறு வேலையாக செல்லும் மக்கள் அமருவதற்கு கூட இடம் இல்லை.
அதுபோல் அலுவலர்களும் நெருக்கடியில் அமர்ந்து பணியாற்றுகின்றனர். மாதந்தோறும் வாடகை கொடுப்பதால் அரசுக்கு ரூ.பலஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே வாடகை கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களுக்கு சொந்தமாக கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.