/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அதிகாரிகள் பாராமுகம் ... கடற்கரையில் குவியும் துணிகள் குறித்து : கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து
/
அதிகாரிகள் பாராமுகம் ... கடற்கரையில் குவியும் துணிகள் குறித்து : கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து
அதிகாரிகள் பாராமுகம் ... கடற்கரையில் குவியும் துணிகள் குறித்து : கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து
அதிகாரிகள் பாராமுகம் ... கடற்கரையில் குவியும் துணிகள் குறித்து : கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து
ADDED : டிச 29, 2025 06:41 AM

சாயல்குடி: மன்னார் வளைகுடா மாரியூர் கடற்கரையில் புனித நீராடி துணிகளை விட்டு செல்வதால் அப்பகுதி முழுவதும் அசுத்தமடைகிறது. இதை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை, கடல், கடற்கரை மாசுபடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் சாயல்குடி அருகே மாரியூரில் பூவேந்தியநாதர் கோயில் உள்ளது. வருண பகவானால் பூஜிக்கப்பட்ட கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர்.
கோயிலில் இருந்து ஒரு கி.மீ.,ல் மாரியூர் மன்னார் வளைகுடா கடற்கரை அமைந்துள்ளது. வெள்ளை நிற மணற்பாங்கான பகுதியில் பேரலைகளின் தாக்கத்தால் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ளது. இக்கரையில் இருந்து பார்த்தால் நல்ல தண்ணீர் தீவு மற்றும் உப்பு தண்ணீர் தீவு உள்ளிட்டவைகள் எளிதாக தெரியும்.
மாரியூர் மன்னார் வளைகுடா கடலுக்கு விசேஷ தினங்கள் மற்றும் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் புனித நீராடுவதற்காக வருகின்றனர். இந்நிலையில் கொண்டு வந்த துணிகளை போட்டு விட்டு செல்வதால் நுாற்றுக்கணக்கான குப்பை மற்றும் துணிகள் அப்படியே கிடக்கின்றன. இதனால் அப்பகுதி அசுத்தம் அடைந்து வருகிறது.
கடலாடி பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் ராஜசேகர பாண்டியன் கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டிற்கு முன்பு உடைமாற்றும் அறை புதிதாக தொகுதி அமைச்சரால் கட்டப்பட்டுள்ளது. மாரியூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எவ்வித துாய்மைப் பணியும் மேற்கொள்ளாமல் பல மாதங்களாக அப்படியே விட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் குப்பை மற்றும் துணியால் பரவி காணப்படுகிறது.
ஊராட்சியை நிர்வகிக்கும் தனி அலுவலர் மற்றும் கடலாடி யூனியன் நிர்வாகத்தினர் குப்பையை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருவாரியான குப்பை காற்றில் பறந்து செல்வதால் டால்பின், கடல் ஆமை, உள்ளிட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்பை சந்திக்கிறது. எனவே கடல் மற்றும் எழில்மிகு கடற்கரை மாசுபடுவதை தவிர்க்கவும், ஊராட்சி நிர்வாகம் உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.

