/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மண்டபம் மீனவர்கள் 3 பேரை கைது செய்த இலங்கை கடற்படை: ஜன.7 வரை சிறை
/
மண்டபம் மீனவர்கள் 3 பேரை கைது செய்த இலங்கை கடற்படை: ஜன.7 வரை சிறை
மண்டபம் மீனவர்கள் 3 பேரை கைது செய்த இலங்கை கடற்படை: ஜன.7 வரை சிறை
மண்டபம் மீனவர்கள் 3 பேரை கைது செய்த இலங்கை கடற்படை: ஜன.7 வரை சிறை
ADDED : டிச 29, 2025 03:32 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
நேற்றுமுன்தினம் மண்டபத்தில் இருந்து 335 விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், வழக்கம் போல் இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர்.
இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை அவசரமாக படகில் இழுத்து வைத்துக் கொண்டு நாலாபுறமும் படகுடன் ஓடினார்கள். அப்போது வலையை இழுக்க தாமதமானதால், ஜோசப் என்பவரது படகை மடக்கி பிடித்த இலங்கை வீரர்கள், படகில் இருந்த மீனவர்கள் ஆமோஸ்டின்45, ஜோர்தன்35, பரலோக செபஸ்தியான் 28, ஆகியோரை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு படகுடன் அழைத்துச் சென்றனர். பின் மீனவர்களை யாழ்ப்பாணம் மீன்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
மீனவர்கள் மீது எல்லை தாண்டியதாக வழக்கு பதிந்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். மீனவர்களை ஜன., 7 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மீனவர்களை விடுவிக்கக் கோரி மண்டபம் கோயில்வாடி மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

