/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதர் மண்டிய துணை மின் நிலையம் கண்டுகொள்ளாத அதிகாரிகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ADDED : ஜன 26, 2025 05:56 AM
கீழக்கரை : ஏர்வாடி மற்றும் இதம்பாடல் சுற்றுவட்டார கிராமங்களுக்காக கடந்த 2017ல் புதியதாக துணைமின் நிலையம் அமைக்கப்பட்டது. முன்பு உத்தரகோசமங்கை துணை மின் நிலையத்தில் இருந்து செயல்பட்டது. பின்னர் பிரிக்கப்பட்டு புதிய துணை மின் நிலையமாக செயல்படுகிறது. 110 கே.வி திறன் கொண்ட துணை மின் நிலையத்திற்கு வழுதுார் மற்றும் பரமக்குடி காவனுார் பகுதியில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த 2017ல் அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தை சுற்றிலும் புதர் மண்டிய நிலையில் காணப்படுகிறது.
மழைக்காலங்களில் மழை நீர் அப்பகுதி முழுவதும் நிரம்பி உள்ளதால் உயர் அழுத்த திறன் கொண்ட மின் டிரான்ஸ்பார்மர்களை இயக்குவதில் தொய்வு ஏற்படுகிறது.
துணை மின் நிலையத்தின் நுழைவாயில் பகுதி தரமற்றதாக கட்டப்பட்டுஉள்ளதால் கீழே விழும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் அதிகம் வருவதால் அச்சத்துடன் மின்வாரிய பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
எனவே சேதமடைந்த நுழைவு வாயில் கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டவும், புதர் மண்டியுள்ள இடத்தை துாய்மை செய்து முறையாக பராமரிக்க வேண்டும். இதற்கென மாதந்தோறும் ஒதுக்கப்படும் பராமரிப்பு நிதியை அலுவலர்கள் பயன்படுத்தாமல் உள்ளனர்.
எனவே மாவட்ட மின்வாரிய அலுவலகத்தினர் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.