/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாயாகுளத்தில் மோட்டார் வைத்து உறிஞ்சப்படும் ஜல்ஜீவன் திட்ட குடிநீர் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
மாயாகுளத்தில் மோட்டார் வைத்து உறிஞ்சப்படும் ஜல்ஜீவன் திட்ட குடிநீர் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
மாயாகுளத்தில் மோட்டார் வைத்து உறிஞ்சப்படும் ஜல்ஜீவன் திட்ட குடிநீர் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
மாயாகுளத்தில் மோட்டார் வைத்து உறிஞ்சப்படும் ஜல்ஜீவன் திட்ட குடிநீர் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஜூலை 16, 2025 11:23 PM
கீழக்கரை: மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் சட்ட விரோதமாக மோட்டார் வைத்து உறிஞ்சும் போக்கு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி பகுதிகளில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூரில் கிடைக்கக்கூடிய தண்ணீரைக் கொண்டு அப்பகுதி மக்களுக்கு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.
சின்ன மாயாகுளம் கடற்கரை செல்லும் வழியில் ஜல் ஜீவன் திட்டத்திற்காக மூன்று எண்ணிக்கையில் பெரிய கிணறுகள் தோண்டப்பட்டுள்ளது. கிணறுகளில் இருந்து உரிய முறையில் தண்ணீர் ஏற்றம் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட குழாய்களின் வழியாக வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுஉள்ளது.
மேலும் 6000த்திற்கும் அதிகமானோர் வசித்து வரும் மாயாகுளம் பகுதியில் மேடான பகுதிகளுக்குதண்ணீர் வரத்தின்றி உள்ளதால் இத்திட்டம் முழுமையாக சென்றடையாத நிலை தொடர்கிறது.
மாயாகுளத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ராமு கூறியதாவது:
மாயாகுளம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில்கடந்த மூன்று ஆண்டுகளாக பொதுமக்களுக்கு தண்ணீர் உரிய முறையில் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மேடான பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில்லை. குறிப்பாக தண்ணீர் வரக்கூடிய பகுதிகளில் வீடுகளில் சட்டவிரோதமாக அதிக திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சுகின்றனர். இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர்பிரச்னைக்கு உள்ளாகின்றனர்.
டிராக்டரில் குடம் தண்ணீர் ரூ.12க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இது குறித்து திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் சட்ட விரோதமாக குடிநீரை திருடுவோர் மீது அபராதம் விதித்து தங்கு தடையின்றி தண்ணீர்வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.