/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாலையோர ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் பழமையான ராணி மங்கம்மாள் சாலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
சாலையோர ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் பழமையான ராணி மங்கம்மாள் சாலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
சாலையோர ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் பழமையான ராணி மங்கம்மாள் சாலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
சாலையோர ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் பழமையான ராணி மங்கம்மாள் சாலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஆக 12, 2025 05:56 AM
ரெகுநாதபுரம் : திருப்புல்லாணியில் இருந்து ரெகுநாதபுரம் செல்லும் சாலை 12 கி.மீ.,ல் அமைந்துள்ளது.
பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த ராணி மங்கம்மாள் சாலை தற்போது வரை ராமேஸ்வரம் செல்வதற்கான பிரதான வழித்தடச்சாலையாக அமைந்துள்ளது.
திருப்புல்லாணியில் இருந்து பஞ்சத்தாங்கி, தினைக்குளம், வண்ணாங்குண்டு, பத்திராதரவை, நயினாமரைக்கான், ரெகுநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலையின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால் நாளுக்கு நாள் சாலை சுருங்கும் அபாயம் நிலவுகிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது: திருப்புல்லாணியில் இருந்து ரெகுநாதபுரம் செல்லக்கூடிய ராணி மங்கம்மாள் சாலையின் இரு புறங்களிலும் அரசுக்கு சொந்தமான இடங்கள் அதிகம் உள்ளது. இந்நிலையில் இதனை பயன்படுத்தி ஒரு சில கடைக்காரர்கள் சாலையோர ஆக்கிரமிப்புகளை கொண்டு தங்கள் கடைக்கான வணிகப் பொருட்களை பரப்பும் சூழலை துவக்கி உள்ளனர். இதனால் ஒரு கடைக்காரர் வைக்கக்கூடிய ஆக்கிரமிப்பு பொருளுக்கு ஏற்றவாறு அருகில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் உள்ளவர்களும் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு பொருள்களை வைக்கும் நிலை தொடர்கிறது. கட்டுமான பொருட்கள், வேலிகற்கள், இரும்பு கடைகள், மரத்துண்டுகள் மற்றும் வணிகரீதியான ஏராளமான தளவாடப் பொருட்களை அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். அவ்வழியாக வாகனங்கள் செல்லும் சாலை நாளடைவில் சிறியதாக மாறும் அபாயம் உள்ளது. எனவே அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்போர் மீது சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் கீழக்கரை வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விஷயத்தில் கிராம உதவியாளர், வி.ஏ.ஓ., மற்றும் போலீசார் அடங்கிய குழுவை நியமித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

