/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு தயாராகும் அலுவலர்கள்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு தயாராகும் அலுவலர்கள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு தயாராகும் அலுவலர்கள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு தயாராகும் அலுவலர்கள்
ADDED : அக் 29, 2025 02:37 AM
திருவாடானை: திருவாடானை சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தயராகி வருகின்றனர். திருவாடானை சட்ட சபை தொகுதியில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 971 ஆண்கள், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 311 பெண்கள், 3 திருநங்கைகள் என 3 லட்சத்து 18 ஆயிரத்து 37 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இத்தொகுதியில் 347 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து திருவாடானை தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது:
பீஹார் மாநிலத்தை போலவே தமிழகத்திலும் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள சிறப்பு திருத்தப் பணி துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருவாடானை சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், அந்தந்த பி.எல்.ஓ.,க்கள் (ஓட்டுச்சாவடி அலுவலர்) வாயிலாக வீடு தேடிச் சென்று தீவிர திருத்தத்திற்கான படிவம் வழங்கப்படும்.
வாக்காளர்கள் அந்த படிவத்தில் கையழுத்திட்டு ஆணையம் குறிப்பிடும் 11 ஆவணங்களில் ஒன்றை இணைத்து குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில் வரைவு பட்டியல் தயாரிக்கப்படும் என்றனர்.

