/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அதிகாரிகளே அகற்றுங்க: கடற்கரையோரம் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு; அச்சத்தில் ஆமை முட்டையிடுதல் குறைவு
/
அதிகாரிகளே அகற்றுங்க: கடற்கரையோரம் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு; அச்சத்தில் ஆமை முட்டையிடுதல் குறைவு
அதிகாரிகளே அகற்றுங்க: கடற்கரையோரம் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு; அச்சத்தில் ஆமை முட்டையிடுதல் குறைவு
அதிகாரிகளே அகற்றுங்க: கடற்கரையோரம் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு; அச்சத்தில் ஆமை முட்டையிடுதல் குறைவு
ADDED : மார் 17, 2024 11:41 PM
வாலிநோக்கம் : கீழக்கரை அருகே பெரியபட்டினம் முதல் வாலிநோக்கம் மற்றும் ரோஜ்மா நகர் வரை உள்ள மன்னார் வளைகுடா கடற்கரையோர பகுதிகளில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. போதிய இடமின்றி அச்சத்தில் ஆமைகள் முட்டையிடுதல் குறைந்துள்ளது. அதிகாரிகள் கண்காணித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மன்னார் வளைகுடா வனச்சரகத்திற்கு பாத்தியப்பட்ட கடற்கரையோர மணல் பகுதிகளில் தனி நபர்கள் தங்கள் இடத்தை காட்டிலும் கூடுதலாக அரசு இடத்தை ஆக்கிரமித்து காம்பவுண்டு சுவர்கள் கட்டியும் கம்பி வேலிகள் மூலம் ஆக்கிரமித்தும் வரும் நிகழ்வு தொடர்கதையாகவே நிகழ்கிறது. கடந்த 10 வருடங்களில் அதிகப்படியான அளவில் கடற்கரையோர ஆக்கிரமிப்புகளின் பாதிப்பால் அதனை நம்பியுள்ள ஆமை இனங்கள் முட்டையிடும் எண்ணிக்கை குறைந்து வருவது ஆய்வில் தெரிய வருகிறது.
நடப்பாண்டில் ஆமை முட்டைகள் பொரிப்பகம் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் சார்பில் வாலிநோக்கம் பம்பு ஹவுஸ், சீலா மீன் பாடு, ஆதம்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆமை முட்டைகள் குஞ்சு பொரிப்பகம் இயங்கி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் எண்ணிக்கையில் கிடைக்கப்பெற்ற ஆமை முட்டைகள் தற்பொழுது 2500 எண்ணிக்கையிலேயே உள்ளது.
இதுகுறத்து வனத்துறையினர் கூறியதாவது: ஆமைகள் ஆளில்லாத கடற்கரை பகுதியை தோட்டமிட்டு அதில் 100 முதல் 150 முட்டைகள் இடுவது வழக்கம். தற்பொழுது கடற்கரை மணல் பகுதிகளை தனிநபர்களின் ஆக்கிரமிப்பு செயல்களால் ஆமைகள் அச்சப்பட்டு முட்டையிடுவது தவிர்த்துள்ளன. இதுகுறித்து மீனவ கிராமங்களில் வனத்துறையின் சார்பில் விழிப்புணர்வு வழங்கி வருகிறோம் என்றனர்.
மன்னார் வளைகுடா கடற்கரையில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற கடல் வளத்தை காப்பதற்கு போலீசார், வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.

