நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சுப்பையா நகரைச் சேர்ந்தவர் போஸ் 67. இவர் மதுரை--ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை நடைபயிற்சி சென்றார். அப்போது தனியார் கல்லுாரி அருகே எதிரே வேகமாக வந்த லாரி போஸ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி மரம் வேரோடு சாய்ந்தது. தப்பியோடிய லாரி டிரைவரை கேணிக்கரை போலீசார் தேடுகின்றனர்.